கிருபையின் காலம் இதுவே – Kirubayin Kaalam ithuve
கிருபையின் காலம் இதுவே – Kirubayin Kaalam ithuve
கிருபையின் காலம் இதுவே
கிருபா உம்மைத் தேடவே
விரைந்தவர் வருகின்றாரே
நித்தியத்தில் என்னைச் சேர்க்கவே
இயேசுவே மாறாதவர்
வருகின்றார் சீக்கிரமாய்
நீதிமானை தேடி அல்ல
இந்த பாவியை இரட்சிக்கவே
தேடி ஓடி வந்தார்
என்னை பரிசுத்தனாக்கிடவே
பாவத்தை பாராதவர் – இயேசு
எனக்காக பாவமானாரே
ஓடி வா வென்று அழைக்கிறாரே
நித்திய ஜீவனை அளித்திடவே
கடைசி காலம் இதுவே
உணருவாயோ ஜனமே
நம்பி வா அவரண்டையே
நித்திய ஜீவனை அளித்திடுவார்
நம்பி வருகிறேன் உம்மண்டையே
கழுவிடும் உம் இரத்தத்தால்
பயன்படுத்தும் என்னையே
வெளிச்சமாய் உலகத்திற்கு