தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri soluvean
தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு
அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
அதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர்
நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர்
பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர்
அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லை
காலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர்
நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை
உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
நன்றி கூறுவேன் நானும்
உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன்
உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
நன்றி கூறுவேன் நானும்
உம்பாதம் பற்றி விலை உயர்ந்த தைலம் பூசிடுவேன்
தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு
அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
சுகம் தந்து பெலனும் தந்து உண்ண உணவும் தந்தீர்
உடுத்த நல்ல உடையும் தந்தீர் அரவணைப்பும் தந்தீர்
ஒன்றுக்கும் உதவாத களிமண்ணை போல் இருந்தேன்
உமது கரத்தால் என்னை வனைந்தீரையா
சங்கிலிகள் கட்டப்பட்ட பைத்தியம் போல் இருந்தேன்
ஞானிகளை வெட்கப்பட வைத்தீர்ஐயா
உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
நன்றி கூறுவேன் நானும்
உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன்
உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து
நன்றி கூறுவேன் நானும்
உம்பாதம் பற்றி விலை உயர்ந்த தைலம் பூசிடுவேன்
தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு
அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்கு
நான் தூங்க என்னை காக்க நீரோ தூங்குவதில்லை
கடும் புயலின் நடுவிலும் சமாதான குறைவு இல்லை
வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கின்றீர்
பாதாளத்தில் படுத்தாலும் அங்கும் இருக்கின்றீர்
நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
உம்மை மறுதலித்தாலும் நீரோ மறுப்பதில்லை