திருச்சபையின் தூதுபணி – Thirusabaiyin Thuuthupani
திருச்சபையின் தூதுபணி – Thirusabaiyin Thuuthupani
திருச்சபையின் தூதுபணி வருகைவரை நடக்கட்டும்
திருவார்த்தை ஊழியமே மூச்சாக மாறட்டும்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
மங்காத விசுவாசம் நிலைத்தோங்கி வளரட்டும்
சுடர்வீசும் சாட்சிகளாய் நமது கரம் உயரட்டும்
தேவ வரம் நம்மிடையே தெளிவாக விளங்கட்டும்
திருப்புகழை தேவனுக்கு வாழ்வு தினம் படைக்கட்டும்
– அல்லேலூயா
ஜாதிகளை ஈர்க்கும் வண்ணம் நல்லுறவில் பெருகுவோம்
ஜெபவசன போர்கலையாய் பேயின் கொட்டம் அடக்குவோம்
சுந்தரனர் குணங்களாலே பாரோரை கவருவோம்
மறுரூப சாயலுடன் இதயங்களை வெல்லுவோம்
-அல்லேலூயா
தொல்லைகளை எதிர்ப்புகளை துணிவோடு சந்திப்போம்
இழப்பெண்ணும் புயல்வரிணும் சோர்வின்றி செல்லுவோம்
ஆபத்தால் அசையாத சேனைகளாய் வாழுவோம்
அழியாத ராஜாங்கம் கைகோர்த்து வரவேற்போம்
-அல்லேலூயா