தேவ தேவனை ஏகமாய் நாம்- Deva Devanai Yeagamaai Naam

Deal Score+2
Deal Score+2

பல்லவி

தேவ தேவனை ஏகமாய் நாம் பாடிப்போற்றிடுவோம்
இயேசுவின் நாமத்தினால்
பாவரோக சாபம் நீங்கவே
விடுதலையும் அடைந்தோம் – என்றென்றுமாய்

சரணங்கள்

1. உலகம் தரக்கூடா சமாதானமும்
சந்தோஷமும் தந்தார் இயேசு ராஜன்
மண்ணுலகில் ஜீவித்தாலும்
விண்ணுலகின்பத்தை அனுபவிக்க
இந்த நல்பாக்கியம் ஈந்தாரே – தேவதேவனை

2. துன்பமோ துக்கமோ தொல்லைகளோ
தொடர்ந்து வந்தாலும் திகிலடையோம்
சீயோனின் அரண்களைப் போல்
அசையாது நாம் வாழ்ந்திடுவோம்
சேனையதிபன் நம்மோடிருக்க – தேவதேவனை

3. எரிகோவைப் போல் பல எதிர்ப்புகளும்
எழும்பி வந்து நம்மை தடுத்தாலும்
முன் வைத்த காலைப்பின் வைப்பீரோ
வாலிபரே இபா்போர் முனையில்
வல்லமையோடவரைத் துதிப்போம் – தேவதேவனை

4. மாமிச சிந்தையால் ஆவியிலே
மரணமும் விழுகையும் சேர்ந்திடுமே
பயப்படுவீர் நீர் பயப்படுவீர்
பட்சிக்கும் தேவன் நம்மில் இருக்க
பரிசுத்த சிந்தையில் பலப்படுவீர் – தேவதேவனை

5. சீயோனுக்காய் இதோ சீக்கிரத்தில்
ஸ்ரீஇயேசு ராஜனும் தோன்றிடுவார்
அல்லேலூயா! ஆர்ப்பரிப்போம்!
ஆனந்தநாள் வேகம் நெருங்கிடுதே
ஆயத்தமாய் அவரைச் சந்திப்போம் – தேவதேவனை

24 ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.

[மாற்கு 11:24]

Therefore I say unto you, What things soever ye desire, when ye pray, believe that ye receive them, and ye shall have them.

[Mark 11:24]

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo