Home » நம் இயேசுவின் வருகை இன்று- Nam Yesuvin Varugai Intru நம் இயேசுவின் வருகை இன்று- Nam Yesuvin Varugai Intru
நம் இயேசுவின் வருகை இன்று- Nam Yesuvin Varugai Intru
1. நம் இயேசுவின் வருகை இன்று
வெகு சமீபமாய்த் தெரிகின்றது
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
வெகு அவசியமாகின்றது
பல்லவி
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்
ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே
இயேசு கிறிஸ்து வருகின்றார்.
2. பாவத்தில் புரளுவதும்
மா சாபத்தில் முடியும் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
3. தேவனைத் தள்ளுபவர்
மா வேதனை அடைவார் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
4. அன்பினால் வரும் அழைப்பு
நல்லதோர் எச்சரிப்பு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
5. தயவாக ஓடியே வா
கிருபையின் வாசல் உண்டு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம்
மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .