நாள்தோறும் எந்தன் பாரங்கள் – Naalthorum Enthan Song lyrics
நாள்தோறும் எந்தன் பாரங்கள் சுமக்கும்
இரட்சிப்பின் தேவன் துதிகளுக்கு பாத்திரர்
மரணத்தில் நின்றும் விடுவித்ததாலே
வாழ்ந்திடும் நாட்கள் பாடுவேன் என்றும்
இயேசுவே என் நம்பிக்கையே
இயேசுவே எந்தன் மகிமையே
இயேசுவே என் பலமானவரே
துதிக்கிறேன் இயேசுவை நான்
சமுத்திரத்தின் நடுவில் வழியை ஆயத்தமாக்கி
இஸ்ரவேலை விடுவித்தார் தேவன்
ஆழியின் நடுவில் வாக்குதத்தம் தந்து ,
என்னையும் உயர்த்தி விடுவிப்பார் தேவன்
அழிவில் நின்று என் ஜீவனையும்
வீழ்ச்சியில் இருந்து என் கால்களையும்
கண்ணீரில் இருந்து என் கண்களையும்
விடுவித்து என் நோய்களை சுகமுமாக்கினீர்