நீர் வந்தாலே போதுமையா -Neer Vanthalae Pothumaiya

Deal Score0
Deal Score0

நீர் வந்தாலே போதுமையா
எங்கள் சூழ்நிலை மாறுமையா-2
உம் மகிமையின் பிரசன்னத்தினாலே
மலைகளும் பர்வதமும் உருகுமே
உம் மகிமையின் வல்லமையினாலே
இருளும் வெறுமையும் மறையுமே

என் கண்ணீர்கள் மாறும்
என் கவலைகள் மாறும்
என் தோல்விகள் மாறும்
எல்லாமே மாறுமையா-இயேசைய்யா
எல்லாமே மாறுமையா-2

காற்றையும் காணவில்லை
மழையையும் பார்க்க்வில்லை
ஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமே
அழுகையின் பள்ளதாக்கில்
உருவ நான் நடந்தாலும்
நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர்

நீர் வந்தாலே போதுமையா
எங்கள் சூழ்நிலை மாறுமையா-4

1.பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும்
கட்டுகள் எல்லாமே கழன்றிடுமே
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும்
இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே-நீர் வந்தாலே

2.தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு இறங்கும்
என் ஆத்துமா பலவானை மிதித்திடுமே
எதிரிகள் மேலே என் கைகள் உயரும்
சத்துருக்கள் மேல் என்னை உயர்த்திடுவீர்-நீர் வந்தாலே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo