பூவிதழே பொன்மலரே – Poovithalae Ponmalarae
பூவிதழே பொன்மலரே – Poovithalae Ponmalarae
பூவிதழே பொன்மலரே போற்றிப்பாடுவேன்
நாவிதழால் விண்மகனே ஏற்றிப்பாடுவென்.
கானமழை வானமதில் மேகம் சூழவே
வானவர்கள் விண்மீதில் வாழ்த்திப்பாடவே
வணங்கிடுவேன். தொழுதிடுவேன் இயேசு பாலனே
1.இறைவாக்கும் மறை வாக்கும் குறித்த நாளிது
இயற்கையெலாம் மகிழ்ச்சியிலே துள்ளி ஆடுது.
இமைகளெல்லாம் விழித்திருந்து துதிகள் பாடுது.
இறையவனே மனுமகனாய் உதித்த நாளிது.
2.ஞானிகளும் அறிஞர்களூம் அறிந்த நாளிது
ஞாலமதில் ஞானமகன் வந்த நாளிது
ஞாபகங்கள் இன்பமதில் வந்து பாடுது
ஞாயிறுகள் ஓளிவெள்ளம் தந்து ஓடுது.
தேகமது சோகமதை வென்ற நாளிது
அடிமைநிலை அன்பதனால் மீட்ட நாளிது.
வறியவரும் எளியவரும் மகிழும் நாளிது.
பாவிகளை தேவனவன் தேற்றும் நாளிது.