மாட்டுத் தொழுவம்- Mattu Thozhuvam
Lyrics,
மாட்டுத் தொழுவம்
என் மன்னன் உறங்கும் மாளிகையானதோ.. (2)
காக்கைக்கொரு கூடுமுண்டு
நரிக்கொரு குழியுண்டு.. (2)
மன்னவனாம் இயேசு ராஜன்
கண்ணுறங்க இடமிந்த..
-மாட்டுத் தொழுவம்
1. உன்னை மீட்க இங்கு வந்தும்
ஏழைக்கோலம் ஏற்றபின்பும்
உணராமல் வாழ்வதா..
அறியாமல் போவதா..
-மாட்டுத் தொழுவம்
2. அடைக்கலம் என்று வந்தால்
மறைவினில் வைத்துக் காப்பார்
சேதம் உன்னை அணுகாது..
தீமை உன்னைத் தீண்டாது..
-மாட்டுத் தொழுவம்
3. தாயைப் போல தேற்றவந்தார்
தந்தைப் போல சுமக்கவந்தார்
நீயே பாரம் சுமப்பதா..
இன்னும் ஏங்கி அழுவதா..
மாட்டுத் தொழுவம்
என் மன்னன் உறங்கும் மாளிகையானதோ.. (2)
காக்கைக்கொரு கூடுமுண்டு
நரிக்கொரு குழியுண்டு.. (2)
மன்னவனாம் இயேசு ராஜன்
கண்ணுறங்க இடமிந்த..
-மாட்டுத் தொழுவம்