யெகோவா நிசி யேகோவா நிசியை – Yehova Nisi Yahova nisiyai

Deal Score+10
Deal Score+10

யெகோவா நிசி யேகோவா நிசியை – Yehova Nisi Yahova nisiyai song lyrics

யெகோவா நிசி யேகோவா நிசியை
போற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே – அல்லேலூயா

சரணங்கள்

1. வீறு கொண்டெழுவீர் இயேசு வீரரே
மாறு கொண்டு மன்னர் முன்னே செல்கிறார்
சீறியெழும் சிங்கங்கள் நாம் அல்லவோ
மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா?
யூத சிங்கம் யுத்த சிங்கமே – யெகோவா

2. கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளைத் தளர்ந்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே – யெகோவா

3. எதிரி வெள்ளம் போல ஏறி வருகின்றான்
இயேசு ராஜா வேகம் கொடியை ஏற்றுவார்
கோலியாத்தின் வேஷமிங்கு செல்லுமா?
கோஷமிடும் இளைஞரின் முன் நில்லுமா?
கர்த்தர் நாமம் வல்ல நாமம் – யெகோவா

4. ஆவியில் நிறைந்த ஜெபம் செய்வோமே
ஆயுதங்கள் அணிந்து களம் செல்வோமே
ஆர்ப்பரித்து அலங்கமதை வீழ்த்தியே
ஆவிகளின் சேனைகளை வெல்வோமே
கொடிகள் ஏந்தும் படைகள் அல்லவோ – யெகோவா

5. நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபலமோ தேவையா?
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா?
ஜீவ தேவ சேனை அல்லவோ? – யெகோவா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo