ராஜா நீர் செய்த நன்மைகள் Raaja Neer Seytha Father.S.J.Berchmans |Jebathotta Jeyageethangal
ராஜா நீர் செய்த நன்மைகள்
அவை எண்ணி முடியாதையா
ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
நன்றி ராஜா இயேசு ராஜா (4)
1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
புது கிருபை தந்தீரையா
ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2
2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
உம் வெளச்சம் தந்தீரையா
பாதம் அமர்ந்து நான் உம் குரல்
கேட்கும் பாக்கியம் தந்தீரையா
3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
பாதுகாத்து வந்தீரையா
உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
வழிநடத்தி வந்தீரையா
4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
தூக்கிச் சென்நீரையா
அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம்
அதிசயம் செய்தீரையா.