வற்றாத நீரூற்றைப் போல -vattraatha neerutrai pola
1.வற்றாத நீரூற்றைப் போல
நான் இருப்பேனா
வறண்ட பாலைநிலம் போல
உலர்ந்து போவேனா
கோதுமை மணி போல
மடிந்து பலன் அளிப்பேனா
காய்க்காத அத்திமரம் போல
அழிந்து மடிவேனா
என் கிருபை நீதானே
என் நம்பிக்கை நீதானே
என் வல்லமை நீ தானே
என் கடவுள் நீதானே
2. திராட்சை கொடியே உன்னில்
இணைந்து கனி தருவேனா
உன்னில் இணையாமல்
பலனின்றி அழிவேனா
நன்மையை நாடி
நான் தீமையை வெறுப்பேனா
தீயோரின் வழியில்
நான் தொலைந்து விடுவேனா
என் தேடல் ஆனவரே
என் இதயம் அறிந்தவரே
என் அருகில்இருப்பவரே
என் ஆயன் ஆண்டவரே
3.அஞ்சாமல் என்றும் உம்மில்
நம்பிக்கை கொள்வேனா
கண்டதை நம்பி பிறர்
கண்முன்னே வீழ்வேனா
நீரோடையோர மரம்போல
செழித்து வளர்வேனா
பொல்லாரைப்போல காற்றில்
பதராய் நான் மறைவேனா
என் அழுகுரல் கேட்பவரே
ஆறுதல் தருபவரே
பெயர் சொல்லி அழைப்பவரே
என் தெய்வம் ஆனவரே
வற்றாத நீரூற்றும் நான்தானே
பலன்தரும் கோதுமைமணி நான்தானே
உன்னில்இணையும் திராட்சைக்கொடி நான்தானே
நீரோடையோர மரம் நான்தானே
என் தாயும் நீதானே
என் தந்தையும் நீதானே
என் அன்பனும் நீதானே
என் நண்பனும் நீதானே