அபிஷேகம் என் தலைமேலே – Abishaegam En Thalaimeale
அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே – 2
முழங்கிடுவேன் சுவிசேஷம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும் – 2
அபிஷேகம் என்மேலே
ஆவியானவர் எனக்குள்ளே
1.இதயங்கள் நொறுக்கப்பட்டார்
ஏராளம் ஏராளம்
காயம் கட்டுவேன் தேசமெங்கும்
இயேசுவின் நாமத்தினால்
2.சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்
விடுதலை பெறலாம்
கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்
கட்டுக்களை உடைக்கணும்
3.துதியின் ஆடை போர்த்தணுமே
ஒடுங்கின ஜனத்திற்கு
துயரத்திற்குப் பதிலாக
ஆனந்த தைலம் வேண்டுமே
4.கிருபையின் காலம் இதுவன்றோ
அறிவிக்கணும் மிகவேகமாய்
இரட்சகர் இயேசு வரப்போகிறார்
ஆயத்தமாகணுமே