வாரும் வாரும் மகத்துவ தேவனே – Vaarum Vaarum Magathuva Devanae

Deal Score0
Deal Score0

வாரும் வாரும் மகத்துவ தேவனே – Vaarum Vaarum Magathuva Devanae

வாரும் வாரும் மகத்துவ தேவனே
வல்லமையாக இப்போ வந்திடும்

1. மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே!
மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே – வாரும்

2. தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு
தரணியில் வேறோர் துணை இல்லையே – வாரும்

3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
பரிசுத்த ராஜனே! நீர் வாருமே – வாரும்

4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
பரலோக ராஜனே! நீர் வாருமே – வாரும்

5. காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம்
கடைசிவரையும் காத்து இரட்சியும் – வாரும்

6. மன்னா! உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
ஏவுதல் தினம் தாரும் ஏகனே – வாரும்

7. விழிப்புள்ள ஜீவியம் விமலா! நீர் ஈந்துமே
வெற்றியடையக் கிருபை தாருமே – வாரும்

8. இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம் – வாரும்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo