வாலிப அலையே தற்காலிக நிலையே – Valiba alaiye tharkalika
வாலிப அலையே தற்காலிக நிலையே – Valiba alaiye tharkalika
வாலிப அலையே தற்காலிக நிலையே (2)
இயேசு எந்தன் கன்மலையே
இன்னல் துன்பம் இனி இல்லையே (2)
1. இளவயதும் வாலிபமும் மாயையே
இந்த இக வாழ்வும் இன்பமும்
போலியே
நலமான நல்ல பங்கு தேவையே
வளமான வாழ்வு உண்டு வாரீரோ (2)
2. விளைந்து நிற்கும் வயல்கள்
எதிரே ஏராளம்
அழிந்து விடுமே அத்தனை
மணியும் அதிவேகம்
எழுந்து வா எழுந்து வா நீ இன்றே
கடந்த காலம் கைவராது விரைந்து வா