Aagamangal Pugal song lyrics – ஆகமங்கள் புகழ்

Deal Score+11
Deal Score+11

Aagamangal Pugal song lyrics – ஆகமங்கள் புகழ்

1.ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ!
வாகு தங்கு குருநாதா, நமோ நமோ!
ஆயர் வந்தனைசெய் பாதா, நமோ நமோ, – அருரூபா,

மாகமண்டல விலாசா, நமோ நமோ!
மேகபந்தியி னுலாசா, நமோ நமோ!
வான சங்கம விஸ்வாசா, நமோ நமோ, – மனுவேலா,

நாகவிம்பம் உயர் கோலா, நமோ நமோ!
காகமும் பணிசெய் சீலா, நமோ நமோ!
நாடும் அன்பர் அனுகூலா, நமோ நமோ, – நரதேவா,

ஏக மந்த்ரமுறு பூமா, நமோ நமோ!
யூக தந்த்ரவதி சீமா, நமோ நமோ!
ஏசு வென்ற திருநாமா, நமோ நமோ, – இறையோனே!

2.அறிவி னுருவாகிய மூலா, நமோ நமோ!
மறையவர்கள் தேடிய நூலா, நமோ நமோ!
அதிசய பராபர சீலா, நமோ நமோ, – அருளாளா,

பொறிவினை யுறாத சரீரா, நமோ நமோ!
குறையணுவிலாத குமாரா, நமோ நமோ!
புவன முழுதாள் அதிகாரா, நமோ நமோ, – புதுவேதா,

நிறைவழியின் மேவிய கோனே, நமோ நமோ!
முறைகள் தவறாத விணோனே, நமோ நமோ!
நிதிபெருகு மாரச தேனே! நமோ நமோ, – நெறிநீதா,

இறை தவிது பாடிய கீதா, நமோ நமோ!
பறைகள்பல கூடிய போதா, நமோ நமோ!
எருசலை யினீடிய நாதா, நமோ நமோ, – இறையோனே.

Aagamangal Pugal song lyrics in English 

1.Aagamangal Pugal Vedha Namo Namo
Vaagu Thangu Guru Naatha Namo Namo
Aayar Vanthanai Sei Paatha Namo Namo – Arurooba

Maaga Mandala Vilasa Namo Namo
Meaga Panthiyinulaasa Namo Namo
Vaana Sangma Viswaasa Namo Namo – Manuveala

Naaga Vumbam uyar Kolo Namo Namo
Kaagamum Pani Sei Seelaa Namo Namo
Naadum Anbar Anukoola Namo Namo – Naradeva

Yeaga Manthramuru Poomaa v
Yuga Thanthravathi Seemaa Namo Namo
Yesu Ventra Thirunaama Namo Namo – Iraiyonae

2.Arivivi Nuruvaagiya Moola Namo Namo
Maraivarkal Theadiya Noolaa Namo Namo
Athisaya Paraapara Seelaa v – Arulaala

Porivinai Yuraatha Sareera Namo Namo
Kuraiyanuvilaatha Kumaara Namo Namo
Puvana Muluthaal Athikaara v – Puthu Vedha

Niraivaliyin Meaviya Konae Namo Namo
Muraikal thavraatha Vinonae Namo Namo
Nithi Perugu Maarasa Theanae Namo Namo – Nerineetha

Irai thavithu Paadiya Geetha Namo Namo
Paraikal Pala Koodiya Potha Namo Namo
Erusalai yineediya Naatha Namo Namo – Iraiyonae

அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.
And he said, I heard thy voice in the garden, and I was afraid, because I was naked; and I hid myself.
ஆதியாகமம் | Genesis: 3: 10

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo