ஆனந்தமே பரமானந்தமே – Aananthamae Paramaananthame
பாடல் 8
ஆனந்தமே பரமானந்தமே-2
மாட்டுத்தொழுவில் மேசியா
மரிமடியில் இயேசையா
பாலனாய் பிறந்தாரே – சிறு-2
1.மன்னாதி மன்னனுக்கு – மகிமை
மாளிகை இங்கில்லையே
மனுக்குமாரன் தலைசாய்த்த இடமில்லாதது அதிசயம்
அதிசயம் (3)
ஆஹாசொல்லொண்ணா அதிசயம்
2. பட்டாடை இங்கு இல்லை
பஞ்சணை மேடையும் இங்கே இல்லை
ராஜகுமாரன் தேவகுமாரன் கந்தையணிந்தது அதிசயம்
அதிசயம் (3)
ஆஹா சொல்லொண்ணா அதிசயம்
3.உள்ளத்தில் வாருமையா – எந்தன்
குளங்கள் நீக்குமையா
பாழான பூமியில் பாவியாம் என்னை தேடி வந்தது அதிசயம்
அதிசயம் (3)
ஆஹா சொல்லொண்ணா அதிசயம்