Akkini Abishegam Engal Meal – அக்கினி அபிஷேகம் எங்கள் மேல்
Akkini Abishegam Engal Meal – அக்கினி அபிஷேகம் எங்கள் மேல்
அக்கினி அபிஷேகம் எங்கள் மேல் ஊற்றி
ஆவியை அனுப்பிடும் தேவா (2)
பரிசுத்த ஆவியை அனுப்பிடும் தேவா
அனுப்பும் நிரப்பும் தேவா
அல்லேலூயா (3)
அல்லேலூயா (3) அக்கினி அபிஷேகம்
1. ஜீவனுள்ள ஆவி என்னில் ஜீவதண்ணீர் ஊற்றிடுமே
காத்திருந்து பெலனடைந்து கழுகு போல பறந்திடவே
அனுப்பும் நிரப்பம் தேவா
அல்லேலூயா (3)
அல்லேலூயா (3) அக்கினி அபிஷேகம்
2. சுட்டெரிக்கும் அக்கினியே சுத்திகரிக்க வந்திடுமே
பரிந்து பேசும் பரிசுத்த ஆவி பாய்ந்து எம்மை நிரப்பிடவே
– (அனுப்பும்) (அல்லேலூயா)
3. மீட்கப்படும் அந்த நாளுக்கென்றே
முத்திரையாய் பெற்ற அபிஷேகம்
மீட்பர் இயேசு வந்திடும் போது
மின்னலைப் போல மறைந்திடவே
அனுப்பும் நிரப்பம் தேவா
– (அல்லேலூயா)