அல்லேலூயா என்று பாடுவோம் – Allelujuh entru paaduvom

Deal Score+1
Deal Score+1

பல்லவி
அல்லேலூயா என்று பாடுவோம் – இரட்சகர் செய்த
நல்ல மாறுதலைக் கூறுவோம்
அனுபல்லவி
அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி
உண்மையாய் நாம் போர் புரிந்து ஊக்கத்துடன் வேலை செய்வோம்
சரணங்கள்
1. பாவியாயலைந்து திரிந்தோம் – அதிசயமாய்
இயேசு இரட்சகரையுங் கண்டோம்;
பாவ ஜீவியம் தவிர்த்து, லோக ஆசையும் வெறுத்து
தாவி வருவோரைச் சுத்திசெய்யும் ஊற்றைக் கண்டுகொண்டோம் – அல்
2. தேவ அன்பின் வெள்ளப்பெருக்கம் – எப்படிப்பட்ட
பாவ வலையையும் அறுக்கும்
ஆவலோடு தேடி வந்தால் போருடை உனக்குடுத்தி
தேவ பட்டயமும் தந்து தீரனாக்குவார் அப்போது – அல்
3. மீட்பர் அன்பால் முன்னே செல்லுவோம், மலைகள் போன்ற
துன்பத்திலும் பயப்பட்டோடோம்
இரட்சிப்பின் நற்பாதையிலே பாவிகளைக் கொண்டு வந்து
சிட்சையடையாமலே நாம் மோட்சபாதைக் கொண்டு சேர்ப்போம் – அல்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo