அருள் நாதா என் குருநாதா- Arul naatha en guru naatha

Deal Score+3
Deal Score+3

அருள் நாதா – என் – குருநாதா
பல்லவி
அருள் நாதா – என் – குருநாதா – ஏழைக்
கபய மிரங்கு மெந்த னரும் போதா!
சரணங்கள்
1. பஞ்சமா பாவங்கள் பல புரிந்தேன்
கிஞ்சித்தும் உன்னை எண்ணா தலைந்திருந்தேன்
நெஞ்ச முருகி யுன்னை நாடி வந்தேன்
தஞ்சம் நீ தான் எனக்கென் தாதாவே! – அருள்
2. நித்திய ஜீவனுக்கு நீயே வழி
பக்தர்க்குப் பாரிதில் நீ தானே ஒளி
உத்தமா எனக்கும் உன் இரட்சையளி
சத்தியம் படைத்தே னுனக்கென்னைப் பலி – அருள்
3. நீயே எனக்கு வேண்டும் நித்திய கர்த்தா
நீதி தவறா திரு தேவ மைந்தா
மாய உலக மிதின் மயக்கம் வேண்டாம்
நேயா என்னை ஏற்றிட மறுக்கவேண்டாம்! – அருள்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo