அருளின் மா மழை பெய்யும் -Arulin maa mazhai peiyum
அருளின் மா மழை பெய்யும்
1. அருளின் மா மழை பெய்யும்
என்று வாக்களித்தோரே!
மாரியாய் பெய்திடச் செய்யும்
லோகத்தின் இரட்சகரே!
தேவன்பின் வெள்ளம்!
தேவன்பின் வெள்ளம் தேவை!
கொஞ்சம் ருசித்த என்னுள்ளம்
கெஞ்சுதே இன்னும் தேவை!
2. கற்பாறை போல் பாவி உள்ளம்
கடினப்பட்ட தயே!
பரிசுத்தாவியின் வெள்ளம்
கரைக்க வல்லதயே – தேவன்பின்
3. வெட்டாந்தரை நிலந்தானும்
ஏதேன்போல் மாறும் என்றீர்;
சாபத்துக் குள்ளான முற்பூண்டும்
கேதுரு வாகும் என்றீர் – தேவன்பின்
4. தேசத்தின் இருளைப் பாரும்,
லோகத்தின் மெய் தீபமே!
ஆவியின் அருளைத் தாரும்
மனம் மாற்ற வல்லவரே! – தேவன்பின்
5. ஏழை என் குறைகள் யாவும்
தீர்த்திடும் வல்லவரே!
யுத்தத்தில் முன்செல்ல ஏவும்
சேனை தளகர்த்தரே! – தேவன்பின்