Arulin Oliyai Kandaar – அருளின் ஒளியைக் கண்டார்
1. அருளின் ஒளியைக் கண்டார்
இருளின் மாந்தரே;
மருள் மரண மாந்தரில்
திரு ஒளி வீச.
2. ஜாதிகளைத் திரளாக்கி
நீதி மகிழ்ச்சியால்
கோதில் அறுப்பில் மகிழ
ஜோதியாய்த் தோன்றினார்.
3. கர்த்தன், பிறந்த பாலகன்,
கர்த்தத்துவமுள்ளோன்;
சுத்த அவரின் நாமமே
மெத்த அதிசயம்.
4. ஆலோசனையின் கர்த்தனே,
சாலவே வல்லோனே,
பூலோக சமாதானமே,
மேலோகத் தந்தையே.
5. தாவீதின் சிங்காசனத்தை
மேவி நிலைகொள்ள
கூவி நியாயம் நீதியால்
ஏவி பலம் செய்வார்.