Devan thantha thiru sabai – தேவன் தந்த திருச் சபையே song lyrics
தேவன் தந்த திருச் சபையே
விசுவாச வாழ்வு தரும் சபையே
மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்
இன்றும் என்றும் அருளிச்செய்யும்
போற்றும் போற்றும் இயேசுவை
சுப வாழ்வு தரும் நேசரை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
இந்த நல் தேவனின் திருச் சபையே
ஆதி அந்தம் வரையில்
நித்ய ஜீவன் நல்கும் மீட்பரை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
இந்த நல் தேவனின் திருச்சபையே
மீண்டும் ஓர் நாள் வருவேன்
என்று வாக்குஉரைத்த வல்லோனை
நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
விந்தைகள் தேவனின் திருச் சபையே