Ithu Nearam Nee Va Karunakara- இது நேரம் நீ வா கருணாகரா
இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி
பல்லவி
இது நேரம் நீ வா கருணாகரா!
1. பாதம் பணிந்தேன் நானே பாவிகள் நேயனே!
இதயம் களிக்க விரைந்தே நீ வா! – இது
2. எங்கிருப்பேர் மூவர் எனைத் துதிப்பார்களோ
அங்கிருப்பேன் என வாக் கீந்தாய் நீ – இது
3. உள்ளக் குறைகள் யாவும் தெள்ளி எமக்குரைக்க
வள்ளலே! அடியாரிடை மகிழ்ந்தே! வா – இது
4. பண்டு அப்போஸ்தலர் பரன் உனைத் தேடவே
அண்டங் குலுங்க எழுந்த விதமாய்! – இது
5. தாசர் இரட்சண்ய வழி சகலர்க்குங் கூறிட
நேச சுத்தாவி தர நிமலா! நீ – இது
6. நம்பிக்கையோ டுந்தன் அன்பின் கரம் நோக்கி
வெம்பி மன்றாடுகின்றோம் விரைந்தே! வா! – இது