ஜீவனுள்ள தேவன் தங்கும் – JEEVANULLA DEVAN THANGUM
ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
பரலோகம் நம் தாயகம்
விண்ணகம் நம் தகப்பன் வீடு
1.கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர்
பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர்
பரிசுத்தர் பரிசுத்தர்
பரலோக தேவன் பரிசுத்தர் – நம்
2. பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள்
திருவிழா கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்
அல்லேலூயா ஓசன்னா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நம் தகப்பன் வீட்டில்
3. பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே
எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நியாயாதிபதி
நீதிபதி கர்த்தரே
எல்லாரையும் நியாயந்தீர்க்கும் நீதிபதி – அவர்
4. புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே
நன்மை தரும் ஆசீர்வாதம்
பேசும் இரத்தம் அங்கே
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்