ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் – Jeevikkiraar Yesu Jeevikkiraar LYRICS
ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கிறார் – Jeevikkiraar Yesu Jeevikkiraar LYRICS
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்(2)
செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்
உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே