Karthavin Suththa Aaviyae – கர்த்தாவின் சுத்த ஆவியே

Deal Score+3
Deal Score+3

Karthavin Suththa Aaviyae – கர்த்தாவின் சுத்த ஆவியே

1. கர்த்தாவின் சுத்த ஆவியே
நீர் எங்கள் ஆத்துமாவிலே
இறங்கி வாசம் பண்ணும்
பரம ஜோதியாகிய
உம்மாலே நாங்கள் சீர்ப்பட
தெளிந்த நெஞ்சும் கண்ணும்
தந்து, வந்து
மெய் ஜெபத்தை, நற்குணத்தை
போதித்தீயும்;
மெய்ச் சந்தோஷத்தை அளியும்.

2. நீர் போதிக்கும் நல் வார்த்தையே
எப்போதும் எங்கள் நெஞ்சிலே
மெய்த் தீபமாவதாக
பிதா சுதன் இருவரால்
இறங்கும் உம்மையும் அதால்
திரியேக தெய்வமாக,
நல்ல, வல்ல
கனிவோடும் பணிவோடும்
போற்றிப் பாடும்
வாக்கை எங்களுக்குத் தாரும்.

3. நல்லோர் அடைகிற எல்லா
மெய் ஞானத்துக்கும் காரணா
நீர் எங்கள்மேலே வாரும்
மற்றோருக்கும் சன்மார்க்கத்தை
அன்பாகக் காட்டும் ஆவியை
நீர் எங்களுக்குத் தாரும்
நாட்டில், காட்டில்
தேசமெங்கும் பொய் அடங்கும்
நாள் உண்டாக
உம்மால் மெய் பலப்பதாக.

4. வழித்துணையாம் கர்த்தரே,
நல் யோசனை அறியோமே,
நீரே வழியைக் காட்டும்
எல்லா உபத்ரவத்திலும்
திடம் நிலைவரத்தையும்
அளித்து முசிப்பார்றும்
வாரும், பாரும்;
கை சலித்துக் கட்டுவிட்டு
போன யாவும்
சீர்ப்பட சகாயம் தாரும்

5. ஜீவாவி, நாங்கள் இயேசுவின்
பிரிய சுவிசேஷத்தின்
பேரின்பத்தால் நிறைந்து
ரட்சிப்பின் நீளம் அகலம்
தெய்வன்பின் ஆழம் உயரம்
ஏதென்றுணர்வடைந்து,
பாவம், சாபம்,
வென்ற கர்த்தா எங்கள் பர்த்தா
என்றறியும்
திட நிச்சயம் அளியும்.

6. கற்போடு எங்கள் நாட்களை
கழிக்க எங்கள் ஆவியை
பலப்படுத்த வாரும்
பொல்லாத ஆசை இச்சையை
விலக்கி, அது எங்களை
தீண்டாதபடி காரும்
வான, ஞான
வாழ்வை நாடும் சீரைத் தாரும்
மோட்சம் காட்டும்
அதால் எங்கள் நெஞ்சை ஆற்றும்.

Karthavin Suththa Aaviyae song lyrics in English

1.Karthavin Suththa Aaviyae
Neer Engal Aathumaavilae
Irangi Vaasam Pannum
Param jothiyagiya
Ummalae Naangal Seerpada
Thealintha Nenjum Kannum
Thanthu Vanthu
Mei Jebaththai Nargunaththai
Pothitheeyum
Mei Santhoshaththai Aliyum

2.Neer Pothikkum Nal Vaarthaiyae
Eppothum Engal Nenjilae
Mei Deepamaaga
Pithaa Suthan Iruvaraal
Irangum Ummaiyum Athaal
Thiriyega Deivamaaga
Nalla Valla
Kanivodum Panivodum
Pottri Paadum
Vaakkai Engalukku Thaarum

3.Karpodu Engal Naatkalai
Kalikka Engal Aaviyai
Belapaduththa Vaarum
Pollatha Aasai Itchaiyai
Vilakki Athu Engalai
Theendathapadi Kaarum
Vaana Gnana
Vaazhvai Naadum Seerai Thaarum
Motcham Kaattum
Athaal Engal Nenjai Aattrum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo