Kirubaiyidhey deva kirubaiyidhey song lyrics – கிருபையிதே தேவ கிருபையிதே

Deal Score+5
Deal Score+5

Kirubaiyidhey deva kirubaiyidhey song lyrics – கிருபையிதே தேவ கிருபையிதே

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

1. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை – கிருபையிதே

2. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் – கிருபையிதே

3. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் பெற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் – கிருபையிதே

4. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவியப் பாதையிலே – இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே – கிருபையிதே

5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் – கிருபையிதே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo