இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் – lvare nam Devan ivare nam Karthar

Deal Score+1
Deal Score+1

இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர் – lvare nam Devan ivare nam Karthar

1 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
சர்வவும் சிருஷ்டித்த சர்வவல்லவர்
சகலமும் தம் வசனம் தாங்குவதாலே
எல்லாமே தம் நிலையில் நிற்கிறது

வானாதி வானங்களே !
கெம்பீரமாய்ப் பாடுங்கள் பூமியின் குடிகளே !
களிகூர்ந்து பாடிடுவோம்
தேவன் தம் ஜனத்தின்
கண்ணீரைத் துடைத்தார்
தேவ ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்

2 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
ஆழத்தில் அதிசயங்கள் செய்பவர்
அலைகளே மிஞ்சிவராதே என்றதால்
ஆறுதல் அடைந்தோராய் முன் செல்கிறோம் -வானாதி

3. இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
மரணத்தை ஜெயமாக விழுங்கியவர்
மரணவாசலினின்று தூக்கி எடுத்ததால்
ஜீவ மார்க்கத்தில் சாட்சியாய் நிற்கிறோம் – வானதி

4 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
முற்றிலும் அழகில் சிறந்த நேசர்
தினம் உந்தன் நுகம் ஏற்றுப் பின் செல்வதாலே
திவ்ய சுபாவத்தில் சிறந்தோராவோம் -வானதி

5 .இவரே நம் தேவன் இவரே நம் கர்த்தர்
சர்வ பூமியையும் மகிழ்விப்பவர்
இணைந்துயர்ந்து வளர்ந்தேறுவதாலே
இணையில்லா இராஜாவின் நகரமாவோம் – வானதி

lvare nam Devan ivare nam Karthar song lyrics in english

1 lvare nam Devan ivare nam Karthar
Sarvavum srushtitha sarva vallavar
Sagalamum tham vasanam thaanguvadhaalay
Elaamay tham nilaiyil nirkiradhu

Vaanaadhi vaanangalay! gembiramai paadungal
Boomiyin kudigalay! kalikoornthu paadiduvoam
Devan tham janathin kanneerai thudaithaar
Dheiva janathukku aarudhal seidhaar

2 lvaray nam Devan ivaray nam Karthar
Aalathil athisayangal seibavar
Alaigal minjivaraadhay endradhaal
Aarudhal adaindhar mun selgiroam

3 lvaray nam Devan ivaray nam Karthar
Maranathai jeyamaaga vilungiyavar
Marana vaasalinindru thooki eduthadhaal
Jeeva maarkathil saatchiyaai nirkiroam

4 lvaray nam Devan ivar nam Karthar
Mutrilum alagil sirandha neisar
Dhinam undhan nugam eitru pin selvadhaalay
Dhivya subaavathil sirandhoaraavoam

5 lvaray nam Devan ivaray nam Karthar
Sarva boomiyaiyum magilvippavar
Inaindhuyarndhu valarndheiruvadhaalay
Inaiyillaa raajaavin nagaramaavoam

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo