Manthai Meikkum Meipparkalae – மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே
மந்தை மேய்க்கும் மேய்ப்பர்களே
பயம் வேண்டாம்
நற்செய்தி ஒன்று நான் அறிவிப்பேன்
பயம் வேண்டாம்
பெத்லேகேம் தொழுவத்தில்
பயம் வேண்டாம்
ரட்சகனாய் பிறந்ததை மகிழ்ச்சியாய் அறிவிப்போம் _ மந்தை
ஏசாயா தீர்க்கர் உரைத்தப் படி ஏழ்மையின் கோலமாய்
கன்னி மரியின் மடியினில் பிறந்தார் இயேசு பாலன் _2
பிறந்தார் இயேசு பாலன்
கன்னியின் மடியினில் – 2 _ மந்தை
ஒளியாய் உலகில் உதித்திட்டார் விழிப்போல் நம்மை காத்திட
அழியா வாழ்வை தந்திட
அவனியில் பிறந்தார் இயேசு _ 2
அவனியில் பிறந்தார் இயேசு
அழியா வாழ்வை தந்திட _ 2 _ மந்தை
மானிடர் பாவம் தீர்த்திட மனிதனாய் பாவமானார்
அன்பின் சொரூபியாம் இயேசுவை
என்றும் போற்றி பாடுவோம் – 2
என்றும் போற்றி பாடுவோம்
அன்பின் சொரூபியாம் இயேசுவை _ 2 _ மந்தை