Melliya Paadal ontru – மெல்லிய பாடல் ஒன்று நான் Song lyrics
மெல்லிய பாடல் ஒன்று நான் பாடுவேன்
மீட்பராம் இயேசுவையே நான் உயர்த்துவேன்
உன்னத தேவனுக்கு நான் பாடுவேன்
எனக்காய் வந்தவரை நான் உயர்த்துவேன்
வழுவாமல் என்னை காப்பவரே
மார்போடு அணைத்தென்னை தேற்றுவாரே
தம் தோளில் சுமந்தென்னை தாங்குவாரே
நெருக்கத்தின் கண்ணீரை துடைப்பாரே
போற்றுவேன் (நான்) போற்றுவேன்
என் உயிருள்ள நாளெல்லாம்-2-ஆ ஆ ஆ ஆ
என் உயிருள்ள நாளெல்லாம்-2
என்னை நடத்திடும் தந்தை நீரே
என்னை தழுவிடும் தாயும் நீரே
என்னை புரிந்திட்ட நண்பன் நீரே
என்னை சூழ்ந்திட்ட சொந்தம் நீரே
எந்தன் குற்றமெல்லாம் மன்னித்தீரே
எந்தன் நோய்களெல்லாம் குணமாக்கினீர்
என் உயிரை அழிவுக்கு விலக்கினீரே
என்னை இரக்கத்தால் முடிசூட்டினீர்
போற்றுவேன் (நான்) போற்றுவேன்
என் உயிருள்ள நாளெல்லாம்-2-ஆ ஆ ஆ ஆ
என் உயிருள்ள நாளெல்லாம்-2
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே
குறைவு என் வாழ்வில் இனி இல்லையே
எந்த பொல்லாப்புக்கும் பயப்படேனே
கர்த்தராம் தேவன் எந்தன் கூட உண்டே
சத்ருக்கள் முன்பாக அபிஷேகித்தீர்
எதிரிகள் முன்பாக உயர்த்திடுவீர்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
நன்மையும் கிருபையும் தொடர செய்தீர்
போற்றுவேன் (நான்) போற்றுவேன்
என் உயிருள்ள நாளெல்லாம்-2-ஆ ஆ ஆ ஆ
என் உயிருள்ள நாளெல்லாம்-2