Naan Paavi Than Aanalum நான் பாவிதான் ஆனாலும் நீர்

Deal Score0
Deal Score0

1. நான் பாவிதான் – ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்;
வா! என்று என்னைக் கூப்பிட்டீர்
என் மீட்பரே! வாறேன்

2. நான் பாவிதான் – என் நெஞ்சிலே
கறை பிடித்த நீசனே!
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே! வாறேன்

3. நான் பாவிதான் – பயத்தினால்
அலைந்து பாவப் பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே! வாறேன்

4. நான் பாவி தான் – விசுவாசத்தால்
சீர், நேர்மை, செல்வம், சொர்க்கமும்
அடைவதற்கு உம்மிடம்
என் மீட்பரே! வாறேன்

5. நான் பாவிதான் – இரங்குவீர்
அணைத்துக் காத்து இரட்சிப்பீர்!
அருளாம் செல்வம் அளிப்பீர்!
என் மீட்பரே! வாறேன்

6. நான் பாவிதான் – அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்;
உமக்குச் சொந்தமாக்கினீர்;
என் மீட்பரே! வாறேன்

https://www.worldtamilchristians.com/naan-paavai-than-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-song-lyrics/
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo