நானே வழி நானே சத்தியம் – Naane Vazhi Naane Sathyam
நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே( மகளே)-உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை
1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகனே ( மகளே)
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே வருவாயா
இதயத்தில் இடம் தருவாயா
3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
வருவாயா என் மகனே ( மகளே)
இதயத்திலே இடம் தருவாயா
4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்
கலங்காதே என் மகனே ( மகளே)
கண்மணிபோல உன்னைக் காத்திடுவேன்