Narseithi Measiya – நற்செய்தி மேசியா
1. நற்செய்தி மேசியா இதோ!
ஆவலாய் நோக்குவோம்
பற்றோடு ஏற்று ஆன்மாவில்
ஆனந்தம் பாடுவோம்.
2. வல்லோனால் சிறையானோரை
வல் சிறை நீக்குவார்
நில்லாதே எவ்விரோதமும்
பொல்லாங்கை மேற்கொள்வார்.
3. நருங்குண்டோரை ஆற்றியே
நலிவை நீக்குவார்
பரத்தின் பாக்கியசெல்வத்தால்
இரவோர் வாழ்விப்பார்.
4. ஓசன்னா! ஆர்க்கும் ஓசன்னா!
சாந்த இவ்வேந்தர்க்கும்;
இயேசுவின் இன்ப நாமமே
பாடுவார் விண்ணோரும்.