Paalan Yesu Paaril Piranthaar – பாலன் இயேசு பாரில் பிறந்தார்
பாலன் இயேசு பாரில் பிறந்தார்
வார்த்தை மனுவானார்
மாந்தர் மகிழ மாட்டுத் தொழுவில்
மனித உருவானார்
ஏழை எளியவர் வாழ
ஏற்றம் கண்டும்மை வாழ்த்த
எங்கும் காரிருள் நீங்க
என்றும் மெய்யொளி வீச
கன்னிமரியிடம் பிறந்தார்
கடவுள் மனிதரானார்
விண்ணும் மண்ணும் இணைந்ததே
ஆனந்தம் பொங்குதே
மனிதம் புனிதம் ஆனதே
அழகே அமுதே இயேசு பாலனே
பிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்து
பிறந்த நாள் வாழ்த்துகள்
Happy Christmas Happy Christmas
அன்பை வழங்கும் இதயமே
இறைவனின் சொந்தமே
பகிர்ந்து வாழும் உள்ளமே
பரமன் இயேசு வாழும் இல்லமே
பிறந்த நாள் வாழ்த்துகள் கிறிஸ்து
பிறந்த நாள் வாழ்த்துகள்
Happy Christmas Happy Christmas