பாதகன் என் வினைதீர் – Paathakan En Vinaitheer Lyrics
பாதகன் என் வினைதீர் – Paathakan En Vinaitheer Lyrics
பல்லவி
பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.
அனுபல்லவி
தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா. – பாதகன்
சரணங்கள்
1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே,
உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? – பாதகன்
2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே;
பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே – பாதகன்
3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே;
தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. – பாதகன்
Paathakan En Vinaitheer Lyrics in English
Paathakan En Vinaitheer Aiyaa Kirubaakaraa Nin
Paadu Ninain thennai Sear Aiyya
Theethakattravae Sirantha
Saen Ulaginimai Vittu
Poothalathugantha Vantha
Punniyanae Yesu Devaa Paathagan
1.Vanthurum Eppaavikalaiyum Angeekarikkum
Maasillatha Yesu Naathanae
Unthan Idam Vanthulamae Urugi Aluthamaathu
Munthimiga Seitha Paavam Muzhuthum poruththaai Antro
2.Sinthina Un Uthiram Athe Theeyon Maraththai
Sinna Pinnam Seiya Vallathae
Pantham Ura Untran Vala Paakamuttra Kalvanaiyae
Vinthaiyura Vearatchitha Vedhanai Avvithamaayae
3.Arpavisuvaasamulan Aam Adiyeanai Ini
Aatharippaar Un Thanjamae
Tharparaa Unai Tharisi Thantri Nambidean Enavae
Seppina Thomavakku Poal Thiru Urukaatchi Thanthu