Seanaikalin karthar nammodu irukiraar – சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்-2
அவர் சொல்ல எல்லாம் ஆகும்
அவர் கட்டளையிட நிற்கும்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்
1.நான் கெம்பீரமாய் நடக்க
என் பாதையை அகலமாக்கினீர்
நான் விசாலத்தில் தங்கிட
என் எல்லையை பெரிதாக்கினீர்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்
என்மேல் கிருபையாய் நீர் தந்த ஈவு
அதிகாரமாய் பெருகிற்று-2
2.என் விருப்பங்கள் நிறைவேற்றிட
நான் செய்வதை வாய்க்க செய்தீர்
என் கனவுகள் நிறைவேறிட
நீர் வாசலை திறந்து வைத்தீர்-2
எனக்கு முத்திரை மோதிரம் தந்து
உங்க வார்த்தையை நிறைவேற்றினீர்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்
3.நான் வாழ்ந்து செழித்திருக்க
நீர் பொக்கிஷத்தை திறந்து வைத்தீர்
நான் சிங்காசனத்தில் அமர
நீர் எனக்காய் யுத்தம் செய்வீர்-2
எனக்கு எதிரான கையெழுத்தை
முற்றிலும் குலைத்திட்டீர்-2
தேவனால் எல்லாம் கூடும்-8
நம் தேவனால் எல்லாம் கூடும்