Un kanneer maaridumae – உன் கண்ணீர் மாறிடுமே
Am, 4/4, Tempo -94
உன் கண்ணீர் மாறிடுமே
உன் கவலைகள் தீர்ந்திடுமே
கர்த்தன் இயேசுவின் கையில் உந்தன்
வாழ்வை தந்தாலே
மாறுமே எல்லாம் மாறுமே
மன்னவன் இயேசுவை நம்பினால்
மலைகளும் பெயர்ந்திடுமே
மாறுமே எல்லாம் மாறுமே
மன்னவன் இயேசுவின் மகிமையால்
மலைகளும் உருகிடுமே
1. உன் கண்ணீரை கூட அவர்
கணக்கில் வைத்துள்ளார்
உன் அலைச்சல்களை கூட
அவர் அறிந்திருக்கின்றார் -2
ஏற்ற நேரத்தில் பலன் வரும் -நீ
எதிர்பார்க்காத நலன் வரும் -2
2. வருத்தத்தோடு நீ இனி பாரம் சுமக்காதே
உன் நேசர் இயேசு உன்னை
அழைக்கின்றாரே -2
உலகம் தந்திட முடியாத
சமாதானத்தை தருகின்றார் -2
3. காலங்காலமாக நீ காத்திருந்தாயோ
நீ எதிர் பார்த்த காரியமெல்லாம்
ஏமாற்றம்தானோ -2
நம்பிக்கையை நீ இழக்காதே
நல்லவர் இயேசு இருக்கின்றார் -2