தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர் – THAYUMANAVAR EN THANTHAI SONG LYRICS
தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்-2
1.துர்க்குணத்தில் உருவானேன்
பாவியாக பிறந்தேன்-2
தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்ட தெய்வமே-2
தாயினும் மேலாய்
என்னை நேசித்தீர்-2-தாயும் ஆனவர்
2.பாவத்தில் வாழ்ந்த என்னை
தேடி வந்தீரே-2
விழுந்து கிடந்த என்னை
தோளில் சுமந்து-2
தந்தையைப்போல் தேற்றி
அணைத்துக்கொண்டீரே-2-தாயும் ஆனவர்
3.துரோகி என்று பாராமல்
ஜீவன் தந்தீரே-2
சிலுவை சுமந்து பாடு பட்டு
எனக்காய் மரித்தீரே-2
தோழனாய் தோள் கொடுத்து
உயர்த்தினீரே-2-தாயும் ஆனவர்