Thentral kaatae veesu -தென்றல் காற்றே வீசு
தென்றல் காற்றே வீசு
இயேசுவோடு பேசு
மனு மைந்தனாய் அவதாரமோ
மரி பாலனாய் அதி ரூபனோ
அதிகாலை அதிசயமோ
அதிகாலை அதிசயமோ – தென்றல் காற்றே வீசு
யூத ராஜன் இவர்தானோ
யாரோ யாரோ யாரோ யாரோ
மனுவேலன் இவர் பேரோ
யாரோ யாரோ யாரோ யாரோ
ஆதியும் அந்தமும் இவர்தானோ
நீதியின் சூரியன் இவர்தானோ
நல்ல ஜீவ அப்பமும் இவர்தானே
பணிந்து போற்றுவோம்
மெய் ஜீவ நதியும் இவர்தானே
இயேசுவைப் புகழுவோம் – தென்றல் காற்றே
முற்றிலும் அழகு உள்ளவரோ
யாரோ யாரோ யாரோ யாரோ
அற்புதம் செய்யும் வல்லவரோ
யாரோ யாரோ யாரோ யாரோ
பரலோகப் பிதாவின் தாசன் அன்றோ
ஆத்மாவுக்குகந்த நேசரன்றோ
எம்மை மீட்கும் மீட்பர் இவர்தானே
இவரைப் புகழுவோம்
எம்மை மேய்க்கும் மேய்ப்பனும் இவர்தானே
பணிந்து போற்றுவோம் – தென்றல் காற்றே
தேற்றும் தேவன் இவரன்றோ
யாரோ யாரோ யாரோ யாரோ
தேற்றரவாளன் இவரன்றோ
யாரோ யாரோ யாரோ யாரோ
முன்னவர் சொன்னவர் இவர்தானோ
முன்னணை மன்னவர் இவர்தானோ
பாவ இருளை நீக்கும் ஒளி தானே
இவரை ஆராதிப்போம்
நம்மை மீட்கும் இரட்சிப்பின் வழிதானே
புகழ்ந்து ஆர்ப்பரிப்போம் – தென்றல் காற்றே