THUDIPPOM HALLELUJAH PADI Tamil christian song lyrics
துதிப்போம் அல்லேலூயா பாடி
மகிழ்வோம் மகிபனைப் போற்றி (2)
மகிமை தேவ மகிமை
தேவ தேவனுக்கே மகிமை – அல்லேலூயா (2)
1. தேவன் நம்மை வந்தடையச் செய்தார்
தம்மை என்றும் அதற்காகத் தந்தார் (2)
அற்புதங்கள் செய்யும் சர்வ வல்ல தேவன்
அடைக்கலம் கொடுத்திடுவார் (2) – துதிப்போம்
2.தேவன் எந்தன் அடைக்கலமாமே
ஒரு போதும் பொல்லாப்பு வராதே (2)
சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே
விடுவித்துக் காத்திடுவார் (2)– துதிப்போம்