Ullam Ellaam Uruguthaiya Lyrics – உள்ளம் எல்லாம் உருகுதையோ
1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மை யன்றி வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்றும் தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
உம் சொந்த மாக்கிக் கொண்டீரே
2. எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்ட என் இயேசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையே
3. வானமீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாளன்றோ
லோக மீதில் காத்திருப்போர்
ஏகமாகக் கூடிட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய்த் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாளன்றோ?
Ullam Ellaam Uruguthaiya – உள்ளம் எல்லாம் உருகுதையோ