உம்மை தான் நான் – Ummai Thaan Naan Parkirean
உம்மை தான் நான் பார்க்கின்றேன்
பிரகாசம் அடைகின்றேன் (2)
அவமானம் அடைவதில்லை
அப்பா நான் உமது பிள்ளை
அப்பா நான் உமது பிள்ளை
ஒருநாளும் அவமானம் அடைவதில்லை (2)
1.கண்கள் நீதிமானை பார்க்கின்றன (உம்)
செவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம்
இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர்
இறுதிவரை நீர் நடத்தி செல்வீர் – அவமானம்
2. உடைந்த நொந்த உள்ளத்தோடு
கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்
அனேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்
அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்
3.நல்லவர் இனியவர் என் ஆண்டவர்
நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்
உண்மையாய் கர்த்தரை தேடும் எனக்கு
ஒரு நன்மையையும் குறைவதில்லையே
4. துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்
நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்
என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்
5.தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே
பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே
எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல்
யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்
உம்மை தான் நான் – Ummai Thaan Naan Parkirean
- என் துதிகள் ஓயாது – Thudhigal Oyaadhu
- தரிசனம் தந்தவரே என்னை – Tharisanam Thanthavare Ennai
- இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae
- பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva
- உங்க அன்பின் அகலம் – Unga anbin agalam



