வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum
வாரும் தேற்றரவரே வாரும் – Vaarum Thettaravare Vaarum
பல்லவி
வாரும், தேற்றரவரே, வாரும்;-எனைச்
சேரும், வினையறுத் தெனைச் சேரும்.
அனுபல்லவி
ஆரும் மாற்றுதற் கரிதான பவம்
தீரும்படி செய்யும், திறவானே. – வாரும்
சரணங்கள்
1. மிகவும் பாழ் நிலம் என்னுள்ளமே;-அதில்
விதைக்கும் திரு வசனத்தையும் தள்ளவே,
ஜகமும் மாமிச ஆசைகளும் மெள்ளவே,-செய்யும்
சதியை அகற்றி எனையாட் கொள்ளவே,
அக மீதா நந்தம் கொண்டுன் புகழ் விள்ளவே,-செஞ்சொல்
அடியன் நான் உமைப் பாடி மகிழ் கொள்ளவே, – வாரும்
2. வாடும் மனதினை ஆற்றுதற்கும்,-வேத
மார்க்கத் தொழுகி உமைப் போற்றுதற்கும்,
சூடென் கெட்ட குணத்தை மாற்றுதற்கும்,-சற்று
துலங்கும் தீபத்திற் கெண்ணெய் ஊற்றுதற்கும்,
நாடும் கதியில் கரை ஏற்றுதற்கும்,-நித்ய
நன்மைகளினால் எனைத் தேற்றுதற்கும், – வாரும்
Vaarum Thettaravare Vaarum song Lyrics in English
Vaarum Thettaravare Vaarum Enai
Searum Vinaiyuruth thennai Searum
Aarum Maattruthar Karithaana Pavam
Theerumpadi Seiyum Thiravaanae Vaarum
1.Migavum Paazh Nilam Ennullamae Athil
Vithaikkum Thiru Vasanaththaiyum Thallavae
Jagamum Maamisa Aasaikalum Mellavae Seiyum
Sathiyai Agattri Enaiyaatkollavae
Aga Meetha Nantham Konduthan Pugal Villavae Senjol
Adiyan Naan Ummai Paadi Magil Kollavae
2.Vaadum Manathinai Aattrutharkkum Vedha
Maarkka Thozhugi Ummai Pottrutharkkum
Soodean Keatta Gunaththai Maattrutharkkum Sattru
Thulangum Deepaththirkku Ennaiyai Oottrutharkkum
Naadum Kathiyil Karai Yeattrutharkkum Nithya
Nanmaikalinaal Enai Theattrutharkkum