Varuvaar Vilithirungal Lyrics – வருவார் விழித்திருங்கள்

Deal Score+1
Deal Score+1

Varuvaar Vilithirungal Lyrics – வருவார் விழித்திருங்கள்

பல்லவி

வருவார் விழித்திருங்கள் , இயேசுநாதர்
வருவார் விழித்திருங்கள்

அனுபல்லவி

பெரியவர் சிறியவர் பேதையர் மேதையர்
சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட – வரு

சரணங்கள்

1.பேரிகையால் அண்டபித்திகளும் குலுங்க
பேர் எக்காளத் தொனியால் பேய்க் கணங்கள் கலங்க
தாரணியோர் மலங்க, தமைப் பற்றினோர்களும்
சீர்நிறை தூதரும் சேர்ந்து சூழ்ந்திட – வரு

2.வானம் மடமடென்க, வையம் கிடுகிடென்க
ஈனப் பேயைச் சேர்ந்த எவரும் நடுநடுங்க
மானம் இன்றி வாழ்ந்த மா பாதகர் அடங்க
ஞான கானம் பாடநல்லோர் சபை தொடங்க – வரு

3.விசுவாசிகள் தமை மெச்சிப் புகழுதற்கும்
மேலா மோட்ச தலத்தோர் சால மகிழுதற்கும்
விசுவாச ஈனரை வியவா திகழுதற்கும்
விண்ணோர் குழாங்கள் சூழ, அண்ணல் கிறிஸ்தரசர் – வரு

4.துன்புற்றோர்க்கு ஜீவ இன்பக் கனிகள் ஊட்ட, தொண்டு செய் அன்பர்க்கு “அண்டர் முடிகள் சூட்ட, அன்பற்றோரை நரக வன்புத் தீயில் வாட்ட, அத்தனைச் சேர்ந்தோரை நித்ய கதியில் கூட்ட

Varuvaar Vilithirungal Lyrics in English

Varuvaar Vilithirungal Yesu Naathar
Varuvaar Vilithirungal

Periyavar Siriyavar Peathaiyar Meathaiyar
Saruvarkkum Nadutheerththu Thagu Balan Aliththida

1.Pearigaiyaal Andapiththikalum Kulunga
Pear Ekkaala thoniyaal Peai Kanagal Kalanga
Thaaraniyor Malanga Thamai Pattrinorkalum
Seer Nirai thootharum Searnthu Soolnthida

2.Vaanam Madamedanga Vaiyam Kidukidenga
Eenai Peauyai Searntha Evarum Nadunadunga
Maanam Intri Vaalntha Maa Paathagar Adanga
Gnana Kaanam Paada Nallor Sabai Thodanga

3.Visuvaasikal Thamai Metchi Pugalutharkkum
Meala Motcha Thalaththor Saala Magilutharkkum
Visuvaasa Eenarai Viyavaa Thikalutharkkum
Vinnor kulaangal Soozha Annal Kiristharasar

4.Thunputtorkku Jeeva Inba Kanigal Ootta Thondu Sei
Anbarkku Andar Mudigal Sootta Anbattorai Naraga Vanba
Theeyil Vaatta Aththanai Searnthorai Nithya Kathiyil Kotta

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo