விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli
விடியல் நேரத்தின் வெள்ளி – Vidiyal Nearathin Velli
1. விடியல் நேரத்தின் வெள்ளி முளைக்குது,
வீட்டுச் சேவலும் விழித்துக் கூவுது,
வடிவில் மிகுந்தோர் பறவை பாடுது,
வணங்க மனமே, நீ எழுந்திராய்!
2. காகங் கூவுது, காலை யாகுது,
காணுங் குணதிசை வெளுத்துக் காணுது,
ஆக மனதினில் அடியார் துதிக்கிறார்,
அதிக சீக்கிரம் எழுந்திராய்!
3. மூத்த முத்தர்கள் துதிகளெழும்புது,
முனிவர் துதிகளின் மூட்மெழும்புது,
காத்த கர்த்தரின் கரமுமெழும்புது,
கடுகி மனமே, நீ எழுந்திராய்!
4. அந்தகாரமும் அகன்றுபோகுது,
அழகுத் தாமரை அரும்பு மலருது,
இந்த நேரத்தில் இணங்கித் துதித்திட,
இரக்கங் கிடைக்திடும், எழுந்திராய்!
5. மயில்கள் தோகையை விரிய நெளிக்குது,
மகத்வ மிருகங்கள் ஓடி யொளிக்குது,
குயில்க ளோசையைக் காட்டத் துவக்குது,
குருவை வணங்க நீ எழுந்திராய்!
6. யேசு நாமமே இன்ப ரசமென
யேற்றி துதிசெய்யும் அடியார்க் கருள்புரி!
யேசு நாமத்தை யெண்ணித் தாசனின்
ஏழை மனமே, நீ எழுந்திராய்!