இயேசுநாதனே இரங்கும் – Yesu Nathanae Irangum

Deal Score+1
Deal Score+1

இயேசுநாதனே இரங்கும் – Yesu Nathanae Irangum

பல்லவி
ஏசுநாதனே!-இரங்கும் என்-ஏசு நாதனே

அனுபல்லவி

ஆசைக்கிறிஸ் தென தன்புள்ள நேசனே, அருளே, தெருளே, பொருளே,
ஆவல் ஆகினேன்-மகா பிரலாபம் மூழ்கினேன்;
ஐயா, நேயா, தூயா, ரட்சியும்;
ஆபத்தினால் பரிதபித்து நிற்கிறேன். – ஏசு

சரணங்கள்

1. அருமை ரட்சகனே; உனை அல்லாமல் ஆதரவார்? ஐயா?
ஆத்தும நாயகன் நீ என்னக்கல்லவோ? அன்புகூர், மெய்யா,
தருணம், தருணம், கைவிடாதேயும்; தலைவா, வலவா, நலவா,
தாமதியாதே;-கிருபை செயும், ஸ்வாமி-இப்போதே,
தாதா! நாதா! நீ தா! நீ கா!
தருமப் பிரகாசனே, பரம சருவேசனே. – ஏசு

2. ஐந்து காயத்தின் கிருபைக் கோட்டையில் அடைக்கலந்தாவே,
ஆதாமின் பாவத்தால் மானிடன் ஆன மெய் வாழ்வே,
விந்தைக் கிருபை அளிக்க வேண்டும்; விமலா, நிமலா, அமலா,
வேறு பண்ணாதே,-மிகும் சீறு-மாறு நண்ணாதே;
மேலா, கோலா, நூலா, நீயே
விரும்பிச் சேரும், கோவே; திரும்பிப் பாரும், தேவே. – ஏசு

குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.
For the vision is yet for an appointed time, but at the end it shall speak, and not lie: though it tarry, wait for it; because it will surely come, it will not tarry.
ஆபகூக் : Habakkuk:2:3

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo