Yesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க
இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க
நம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்க
ஆனந்த கீதங்கள் பாடிடுங்கள்
ஆர்ப்பரித்து பாலகனை கொண்டாடுங்கள் (2)
1. ஏசாயா திருவாக்கு நிறைவேறவே
ஈசாவின் அடிமரம் துளிர்த்ததுவே
ஏழையாக அவதரித்தார்
தாழ்மையாக வந்துதித்தார்
பாரெங்கும் சந்தோஷம் பெருகிடவே – (இந்த)
2. ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்க
ஏகமாய் பூமியில் பாவம் தீர்க்க
பாலகனாய் வானவரே
பாரினிலே அவதரித்தார்
பாரெங்கும் சமாதனம் நிலைத்திடவே – (இந்த)
3. தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரே
பிறந்திட்டோம் எம்முள்ளம் அரசாளுமே
பாவங்களை மன்னித்திடும்
பாசமுடன் ஏற்றுக்கொள்ளும்
என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே – (தேவா)
Yesu piranthar
Pattu padunga
Nam Dhevan piranthar
Kai thaalam podunga — (2)
Aanantha geethangal paadidungal
Aarparithu baalaganai kondadungal — (2)
1. Yesaiya thiruvarku niraiveravae
Esaiyin adimanam thulirthathuvae — (2)
Yelaiyaga aavadharithaar
Thaalmaiyaga avar piranthar — (2)
Endrendum naangal um pillaigalae — Yesu Piranthar
2. Ulagathin pavathai pookidavae
Manithanin saabathai neekidavae — (2)
Un pavangallai manithida
Paasam ulla Yesu undu – Un — (2)
Indre un ullathai kodupaaya — Yesu Piranthar