இயேசுவையே நேசி அவரையே ஆசி -yesuvaiye nesi avaraye aasi

Deal Score+1
Deal Score+1

இயேசுவையே நேசி அவரையே ஆசி -yesuvaiye nesi avaraye aasi

பல்லவி

அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென்
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென்

சரணங்கள்

1. இயேசுவையே நேசி, அவரையே ஆசி
அவரே என்றும் உன் மீட்பர் – அல்லேலூயா

2. விண்ணினைத் துறந்தார், மண்ணினிற் பிறந்தார்
உயிர்தனைத் துறந்தார் பாவி உனக்காய் – அல்லேலூயா

3. பாவத்தைச் சுமந்தார் சாபத்தை தீர்த்தார்
மரணத்தை ஜெயித்தார் நித்தியமாய் – அல்லேலூயா

4. அலகையை எதிர்த்து அவனையே ஜெயித்து
மனிதனை மீட்டு ஜெயித்தெழுந்தார் – அல்லேலூயா

5. உனை மீட்க வந்தார் பரலோகம் சென்றார்
பரிந்துமே பேச உனை உயர்த்த – அல்லேலூயா

6. கிருபைக் காலத்தில் மறுக்காமல் வந்து
அவரையே அண்டு இப்பொழுதே – அல்லேலூயா

7. அழைப்பினை மறுத்து அவரை நீ வெறுத்தால்
நரகினில் வீழ்ந்து அழிந்திடுவாய் – அல்லேலூயா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo