அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் -Adisayamanavar arputhangal seibavar
அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் -Adisayamanavar arputhangal seibavar
அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர்
விதியையும் வெல்பவர் அவர் பெயர்
இயேசு என்பார்
அல்லேலூயா அல்லேலூயா அவர் புகழ்
பாடிடுவோம் அவர் நாமம் போற்றிடுவோம்
வல்ல தேவன் இவர்போல் தெய்வமுண்டோ
நல்ல இயேசு ராஜனுக் இணையுண்டோ
1. நீரின் மேல் நடந்திடுவார்
புயல் காற்றையும் அதட்டிடுவார்
சீறிடும் பேய்களையும்
உடன் ஓடிட விரட்டிடுவார்
2. இழந்ததை மீட்டிடுவார்
கெட்ட இதயத்தை மாற்றிடுவார்
பிணிகளைப் போக்கிடுவார்
சவக்குழியின்றும் எழுப்பிடுவார்